சைதாப்பேட்டையில் போக்குவரத்து முடக்கம்

விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தின்போது, சென்னை சைதாப்பேட்டை பகுதியில் போராட்டக்காரர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால்
சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்,
சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்,

விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தின்போது, சென்னை சைதாப்பேட்டை பகுதியில் போராட்டக்காரர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி, கைது செய்தனர். அதன் பிறகே போக்குவரத்து சீரானது.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருந்தன.
சென்னையிலும் கோயம்பேடு சந்தை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
சென்னை எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக தலைமையிலான அனைத்துக் கட்சியினர் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சைதாப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் சைதாப்பேட்டை பஜார் சாலையில் இருந்து பனகல் மாளிகை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அவர்களில் ஒரு பகுதியினர், பனகல் மாளிகை அருகே சாலையில் மாநகரப் பேருந்துகளை மறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். அதற்குள்ளாக, ஊர்வலம் அங்கு வந்தடைந்ததும் மேலும் ஏராளமானோர் சாலை மறியலில் பங்கேற்றனர்.
இதையடுத்து, ஏராளனமான போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டு, மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தியதோடு, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், மா.சுப்பிரமணியன் உள்பட அனைவரையும் கைது செய்து பேருந்துகள் மூலம் அழைத்துச் சென்றனர்.
இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com