தாய் - சகோதரியைக் கொலை செய்த இளைஞர் அளித்த வாக்குமூலம்

சென்னை சைதாப்பேட்டையில் தாய் - மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தாய் - சகோதரியைக் கொலை செய்த இளைஞர் அளித்த வாக்குமூலம்

சென்னை சைதாப்பேட்டையில் தாய் - மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டை கே.பி.கோயில் தெருவில், மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஹேமலதா (51), அவரது மகள் ஜெயலட்சுமி ஆகியோர் புதன்கிழமை இரவு, வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

தாய்-மகள் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், அவர்களுடன் வசித்து வந்த மகன் பாலமுருகன் காணாமல் போயிருந்தார். அவரது செல்லிடப்பேசியும் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து பாலமுருகனை தேடினர். அவர்கஷ் பாலமுருகனை வியாழக்கிழமை காலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

மனஉளைச்சல் காரணம்?: பாலமுருகனின் அப்பா சண்முகம், அரசுத்துறையில் பணியாற்றியவர். கடந்த ஆண்டு மே மாதம் அவர் திடீரென இறந்துவிட்டார். அப்பாவின் இறப்பு பாலமுருகனை பெரிதும் பாதித்தது. அதன்பிறகு அவர், யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வந்துள்ளார். இந்த சமயத்தில் அப்பாவின் ஓராண்டு நினைவு நாளை மே மாதம் நடத்த வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது, பாலமுருகனின் மனநிலையை மேலும் பாதித்துள்ளது.

இதனால் மனமுடைந்த அவர் தாய், தங்கையை கொலை செய்துவிட்டு, கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், கடல் அலை அவரை வெளியே தள்ளியுள்ளது. இதனால், கடற்கரை வழியாக வந்த அவரை ரோந்து போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் தான் கொலை செய்த விவரத்தை ஒப்புக்கொண்டாதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com