"காந்தியத்தை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்'

காந்திய கொள்கைகளை இளைஞர்கள் அனைவரும் பின்பற்றுவது அவசியம் என முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்தார்.
தக்கர் பாபா வித்யாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்கண்டன் உள்ளிட்டோர்.
தக்கர் பாபா வித்யாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்கண்டன் உள்ளிட்டோர்.

காந்திய கொள்கைகளை இளைஞர்கள் அனைவரும் பின்பற்றுவது அவசியம் என முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்தார்.
சென்னை தியாகராயநகரில் தக்கர் பாபா வித்யாலயத்தில் தையல், தொழில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், காந்திய விழிப்புணர்வு யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.
காந்தியக் கொள்கைகளை கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ந.மார்கண்டன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் கன்னியாகுமரியில் கடந்த மாதம் 3}ஆம் தேதி யாத்திரை தொடங்கினர். இந்த யாத்திரையை சென்னையில் சனிக்கிழமை நிறைவு செய்த குழுவினருக்கு, தக்கர் பாபா வித்யாலயத்தின் செயலர் மாருதி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நரேஷ் குப்தா பங்கேற்றுப் பேசியது:
காந்தியிடம் சத்தியம், அகிம்சை என்ற வலிமையான ஆயுதம் இருந்தது. தற்போது கொலை, பாலியல், கொள்ளைகள் நாள்தோறும் நடப்பதை நாளிதழ்கள் மூலம் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது காந்தியின் அன்பும், சத்தியமும் மறைந்து வருவதுபோல் தோன்றுகிறது.
எனவே, இளைஞர்கள் அனைவரும் காந்தியக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். அந்தளவுக்கு நேர்மையுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். தற்போது, இதை வலியுறுத்தி முன்னாள் துணைவேந்தர் மார்கண்டன் தலைமையில் குழுவினர் யாத்திரை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வரவேற்கிறேன் என்றார் அவர்.
அதையடுத்து யாத்திரைக் குழுவினருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தும், தொழில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் காதி கிராமோத்யோக் பவன் செயலர் ராஜேஸ்வரி, தக்கர் பாபா வித்யாலய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com