தமிழகத்தில் நீர்நிலைகளை மேம்படுத்த அமைச்சரவையுடன் விரைவில் ஆலோசனை: ஆளுநர்

தமிழத்தில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையை போக்க மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைத்து மேம்படுத்த முதல்வர் மற்றும் அமைச்சர்களைஅழைத்து விரைவில்
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னார்வ அமைப்புகளுக்கு ரூ.12 லட்சம், ரூ.14 லட்சத்துக்கான காசோலைகளை சமுதாய அறக்கட்டளை சார்பில் வழங்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ். உடன் (இடமிருந்து) சமூக ஆர்
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னார்வ அமைப்புகளுக்கு ரூ.12 லட்சம், ரூ.14 லட்சத்துக்கான காசோலைகளை சமுதாய அறக்கட்டளை சார்பில் வழங்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ். உடன் (இடமிருந்து) சமூக ஆர்

தமிழத்தில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையை போக்க மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைத்து மேம்படுத்த முதல்வர் மற்றும் அமைச்சர்களைஅழைத்து விரைவில் ஆலோசிக்க இருப்பதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறினார்.
சமுதாய அறக்கட்டளை சார்பாக கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 250 }ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஏழை எளியவர்களுக்கான நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி, துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் மோகன் பராசரன், அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுதா ரகுநாதன், ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நன்கொடைகள்: இந்த நிகழ்ச்சியில் தசைநார் சிதைவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய, தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இந்திய சங்கத்துக்கு ரூ.12 லட்சம், இந்தியாவில் நீர்நிலைகளைச் சீரமைத்து மேம்படுத்தி வரும் "என்விராண்மென்டலிஸ்ட் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா' அமைப்புக்கு ரூ.14 லட்ம் ஆகியவற்றுக்கான காசோலைகள் சமுதாய அறக்கட்டளை சார்பில் நன்கொடையாக அளிக்கப்பட்டன.
விழாவில் ஆளுநர் வித்யா சாகர் ராவ் பேசியது: தண்ணீர் பற்றாக்குறை தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரம், மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் நிலவுகிறது. மகாராஷ்டிரத்தில் திரைத் துறையினர், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் நீர்நிலைகளை மேம்படுத்த முன்வருகின்றனர். தமிழகத்திலும் இதேபோன்று பலதரப்பினரும் முன்வர வேண்டும்.
இளம் சமூக ஆர்வலர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஆளுநர் மாளிகையில் ஒரு சிறப்புக் கூட்டத்தை கூட்ட உள்ளேன். இந்த கூட்டத்துக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்களை அழைத்து திட்டமிட உள்ளோம். அரசு, தனியார் துறைகளோடு, தனிமனிதனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும். அதுதான் தற்போது மிகவும் அவசியம் என்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பேசியது: இசை என்பது கலை, கலாசாரம் என்பது மட்டுமல்ல. அதுவொரு தெய்வீகத்தன்மையை கொண்டது. பத்ம விருதாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் நான் உறுப்பினராக இருந்தபோது, சுதா ரகுநாதனை தேர்வு செய்த குழு, அவருக்கு ஏன் இந்த விருதை வழங்க வேண்டும் என விவாதித்தது. அதில் பல விவாதங்கள் வந்தாலும், அவர் இசையுடன் சமூகப்பணிகளையும் மேற்கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, பத்ம விருதுக்கு சுதா ரகுநாதனை தேர்வு செய்தது என்றார் குருமூர்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com