நாளை சுதந்திர தினவிழா: தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினவிழா செவ்வாய்க்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற உள்ள இடங்களை  மோப்ப நாய்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்யும் போலீஸார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற உள்ள இடங்களை மோப்ப நாய்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்யும் போலீஸார்.

சுதந்திர தினவிழா செவ்வாய்க்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சோதனைக்குப் பின்னரே அனுமதி: சென்னை கோட்டையில் சுதந்திர தினத்தன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்.
இதையொட்டி கடந்த ஒரு வாரமாக கோட்டையில் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழா நடைபெறும் இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று சென்னையில் உள்ள முக்கிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை விமானநிலையம், சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர் ரயில்நிலையங்களிலும் தீவிர சோதனைக்குப் பிறகே பயணிகளை போலீஸார் அனுமதிக்கின்றனர்.
விமான நிலையத்தில் பாதுகாப்பைக் காரணம் காட்டி கடந்த ஒரு வாரமாக பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா முடிந்த பிறகும் மேலும் 2 நாள்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் போலீஸார் வாகனச்சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதைபோல தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு லட்சம் போலீஸார்: சுதந்திர தினத்தையொட்டி சென்னையில்15 ஆயிரம் போலீஸாரும், தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில் "சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து, அவசர போலீஸ் எண் 100-க்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்' என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com