வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக, வரும் 15 -ஆம் தேதி வரை விண்ணப்பங்களைஅளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக, வரும் 15 -ஆம் தேதி வரை விண்ணப்பங்களைஅளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் (சென்னையில் மட்டும்) ஆகியவற்றில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணி வரும் 15 - ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். 
வரும் ஜனவரி 1 -ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் (18 வயது பூர்த்தி அடைந்தோர்) கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜனவரியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிய வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 -ஆம் தேதி, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com