'பக்க விளைவு இல்லாத நோய் எதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிப்பில் அக்கறை தேவை'

நோய் கிருமிகளை அழிக்கும்  நோய் எதிர்ப்பு  மருந்துகள், நோயாளிகளுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை தேவைப்படுகிறது என்று மத்திய சித்த மருத்துவ
'பக்க விளைவு இல்லாத நோய் எதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிப்பில் அக்கறை தேவை'

நோய் கிருமிகளை அழிக்கும்  நோய் எதிர்ப்பு  மருந்துகள், நோயாளிகளுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை தேவைப்படுகிறது என்று மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஆர்.எஸ்.ராமசாமி கூறினார்.
சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் கிரசென்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், நோய் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் மருத்துவத் தொழில்நுட்பம் குறித்த சர்வதேசக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
அதில் அவர் பேசியது: நோய்க் கிருமிகளை அழித்து நோய்களைக் குணமாக்கும் மருத்துவத் தொழில்நுட்ப முறையில் தொடர்ந்து நிகழும் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கேற்ப, நோய்க் கிருமிகள்  
எதிர்ப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் வீரியம் கொள்வதும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்திறன் நோய் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தும் சூழல் ஏற்படுகிறது. ஆனால் இவற்றில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு மருந்துகளை புற்றுநோய், நுரையீரல் அழற்சி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை உள்ளது. 
எனவே, நோய் எதிர்ப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும்போது, அவை பக்க விளைவுகளை ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் என்பதில் மருத்துவத் துறை அக்கறை செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க வழங்கப்பட்ட நிலவேம்பு குடிநீரில் நட்பு, பகை இயல்பு கொண்ட சந்தனம், பற்படாகம், பேய்புடல், விலாமிச்சு, வெட்டிவேர், சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு ஆகியன சேர்க்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியையும், அதனால் பக்க விளைவு ஏற்படாதபடியும் இருக்கும் வகையில் நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய்க்கு மருந்து: சித்த ஆராய்ச்சி நிறுவனம் தற்போது எச்.ஐ.என்.ஐ. இன்புளுன்சா காய்ச்சலுக்கான மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வு நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளது. 
சர்க்கரை நோய்க்கு 'டி5' சூரணம் கண்டறியப்பட்டு விரைவில் காப்புரிமை பெற  உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
கருத்தரங்கில், அமெரிக்கா மிஸ்ஸோரோ பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தி உபேந்திரன், பதிவாளர் வி.முருகேசன், மானுடவியல் துறைத் தலைவர் எஸ்.ஹேமலதா, மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநர் நிக்கத் எம். ஹம்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com