சிதைந்த பாலத்தை புதுப்பிக்க எம்.பி. நிதியிலிருந்து ரூ. 50 லட்சம்

ஆயிரம் விளக்குப் பகுதியில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, சிதைந்த வில்லியம்ஸ் பாலத்தை புதுப்பிக்க பூமி பூஜை செய்து சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை ஆயிரம் விளக்கு 117 }ஆவது வார்டு எம்.கே.ராதா நகர் பகுதியில் கிரியப்பா சாலையை இணைக்கும் புதிய பாலம் அமைக்கப்பட உள்ள இடத்தை சனிக்கிழமை பார்வையிடும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், மாவட்ட

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி, 117 வது வார்டுக்குட்பட்ட எம்.கே.ராதா நகர், எஸ்.எஸ்.புரம், டி.எம்.எஸ், கிரியப்பா சாலையை இணைக்கும் இந்தப் பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இயற்கை சீற்றங்களால் இந்தப் பாலம் சேதமடைந்து, கழிவுநீர் கால்வாயில் விழுந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் தாற்காலிக மரப்பாலத்தை அமைத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாலம் அமைக்க பூமி பூஜை செய்து சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பாலம் அமைக்கும் பணி 60 நாள்களில் நிறைவடையும்.
இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார், மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன், ம"ôநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.ஆறுமுகம் என்ற சின்னையன், சின்னையா, பி.இளைமாறன், ஜி.மணி மற்றும் அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com