தனி மனிதன் ஒவ்வொருவரிடமும் தெய்வத்துவம் வெளிப்பட வேண்டும்

சமுதாயம் அமைதி பெற, தனிமனிதன் ஒவ்வொருவரிடமும் தெய்வத்துவம் வெளிப்பட வேண்டும். அதிலிருந்து உலகம் அமைதி பெறும் என்று ஸ்ரீ சத்ய சாய் சேவை நிறுவனத்தின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்ட்யா தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சத்ய சாய் சேவா அமைப்பின் கூட்டத்தில் பேசுகிறார் அகில இந்தியத் தலைவர் நிமிஷ் பாண்ட்யா. உடன் முன்னாள் அகில இந்தியத் தலைவர் சீனிவாசன்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சத்ய சாய் சேவா அமைப்பின் கூட்டத்தில் பேசுகிறார் அகில இந்தியத் தலைவர் நிமிஷ் பாண்ட்யா. உடன் முன்னாள் அகில இந்தியத் தலைவர் சீனிவாசன்.

சமுதாயம் அமைதி பெற, தனிமனிதன் ஒவ்வொருவரிடமும் தெய்வத்துவம் வெளிப்பட வேண்டும். அதிலிருந்து உலகம் அமைதி பெறும் என்று ஸ்ரீ சத்ய சாய் சேவை நிறுவனத்தின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்ட்யா தெரிவித்தார்.

சென்னை அண்ணாமலைபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நிமிஷ் பாண்ட்யா பேசியது: தனிமனிதன் ஒழுக்கம் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த உலகில் அவதரித்து நமக்கு போதனை செய்து உள்ளார் ஸ்ரீ சத்ய சாய்பாபா. தனிமனிதன் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக, சாய்பாபா இந்த உலகத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி வருகிறார்.
கஷ்டப்படும் மக்களைத் தேடி சென்று தன்னலம் எதிர்பாராமல் சத்ய சாய் நிறுவனம் சேவையாற்றி வருகிறது. தியாகராய நகரில் சிறப்பு குழந்தைகள் 150 பேருக்குப் பயிற்சி கொடுத்து, பி.ஹெச்.டி. முடிக்க வைத்துள்ளோம்.
இயற்கை பேரிடர் நேரங்களில் சேவையாற்றுவதற்காக "பேரிடர் நிவாரணம்' அமைப்பு 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்று நாடு முழுவதும் சிறப்பாக உள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்கள் என்று பல்வேறு தரப்பில் 45,000-க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு "பால விகாஷ்' என்னும் மிகப்பெரிய திட்டத்தை பாபா அளித்துச் சென்றுள்ளார். அந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மட்டும் சுமார் 80,000 பேர் பயின்று வருகிறார்கள்.
நாடு முழுவதும் மருத்துவ சேவையாற்றி வருகிறோம். இதில் 16,000 மருத்துவர்கள், 45,000 மருத்துவப் பணியாளர்கள், சேவா தளத்தை சேர்ந்த 1 லட்சத்து 17 ஆயிரத்து 195 பேர் மருத்துவ சேவையாற்றி உள்ளனர். அதற்காக ரூ. 37 கோடியே 29 லட்சத்து 46 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், திருக்கழக்குடி, திருநகரி, சித்தோடு, நன்மங்கலம் ஆகிய இடங்களில் தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார் நிமிஷ் பாண்ட்யா.
நிகழ்ச்சியில், முன்னாள் அகில இந்திய தலைவர் ஸ்ரீனிவாசன், ஸ்ரீ சத்யா சாய் அறக்கட்டளை அமைப்பாளர் வி.மோகன், ஸ்ரீ சத்யா சாய் சேவா அமைப்பின் மாநிலத் தலைவர் ஜி.வரதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com