போரூர் மேம்பாலம் திறப்பு: எம்.ஜி.ஆர் பெயர் சூட்டினார் முதல்வர்

சென்னை போரூர் சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு "பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்' என பெயர் சூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
சென்னை போரூர் மேம்பாலத்தை ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சென்னை போரூர் மேம்பாலத்தை ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

சென்னை போரூர் சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு "பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்' என பெயர் சூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
மவுண்ட் - பூவிருந்தவல்லி சாலையில் போருர் சந்திப்புப் பகுதியில் ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்காக கடந்த 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், பாலம் கட்டுமானப் பணியின் போது அடியில் குடிநீர் குழாய் சென் ôல் பணியில் தொய்வு ஏற்ப்பட்டது.
அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு ரூ.54 கோடி மதிப்பீட்டில் பாலத்தைக் கட்டி முடிக்கத் திட்டமிட்டது. கடந்த 7 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்ததால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. இப்பாலத்தை உடனடியாகக் கட்டி முடிக்க வேண்டும் என்று அப்பகுதிவாசிகள், அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு விதங்களில் அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது.
தற்போது மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்துப் பேசியது:
பல்வேறு பிரச்னைகளுக்குப் பின் போரூர் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு முந்தைய திமுக ஆட்சியின் முறையான திட்டமிடல் இல்லாததே காரணம். அவர்கள் ஆட்சியில் பாலம் கட்டும் பணியில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்படாததாலும், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாகவும் பாலம் கட்டும் பணிகளில் தாமதம் ஏற்ப்பட்டது. பின்னர் பொறுப்பேற்ற அதிமுக அரசு பல்வேறு சிக்கல்களைக் களைந்து மிக விரைவாக இந்தப் பாலத்தை கட்டி முடித்துள்ளது.
இந்த மேம்பாலம் மொத்தம் 505 மீட்டர் நீளமும், 17.20 மீட்டர் அகலமுள்ள நான்கு வழித்தடங்களைக் கொண்டதாகும். போரூர் சந்திப்பில் தற்போது நாளொன்றுக்கு சுமார் 1,18,015 வாகனங்கள் வந்து செல்கின்றன. பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் மிகுதியான இப்பகுதியில், இம்மேம்பாலம் திறக்கப்பட்டதன் மூலம், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாகன நெரிசல் வெகுவாகக் குறைவதுடன், பயண நேர விரயமும் தவிர்க்கப்படும்.
மாநில ஊரகத் தொழில் துறை அமைச்சர் பி. பெஞ்சமின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருத்தணி அரி, வேணுகோபால், கே.என்.ராமச்சந்திரன், வெங்கடேஷ்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எ.சுந்தரவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com