இறைச்சிக்காக மாடுகள் விற்கத் தடை: தலைவர்கள் கண்டனம்

இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளைச் சந்தைகளில் விற்பதற்கு ஒட்டு மொத்தமாக மத்திய அரசு தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மதச் சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம், நாட்டின் மதச் சார்பற்ற தன்மை, அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் எல்லாவற்றையும் மறுக்கும் விதத்தில் ஓர் அறிவிக்கையை மத்திய அரசே வெளியிட்டுள்ளது. இது நல்லாட்சியின் இலக்கணம் இல்லை.
நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் விதமாக நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்காக விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தத் தடையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
உணவு என்பதில் நீண்ட காலமாக மக்களுக்குள்ள அடிப்படை விருப்புரிமையைத் தடுத்திடக் கூடாது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: மக்கள் தொகையில் சரிபாதிக்கும் அதிகமானோர் மாட்டிறைச்சியைச் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள்.
இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடுப்பது மதச்சார்பின்மைக் கொள்கைக்கும்
வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்புக்கும் எதிரான நடவடிக்கையாகும். மத்திய அரசின் மக்கள் விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பதுடன், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும்.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: இந்தியாவில் இறைச்சிக்காகக் கால்நடைகளை சந்தைகளில் விற்கக்கூடாது என பாஜக அரசு ஆணை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்த ஆணை சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது மட்டுமல்ல பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட
வர்கள் என மாட்டிறைச்சியை உண்ணக்கூடிய ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எதிரானதாகும்.
இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலர் எம்ஜிகே நிஜாமுதீன்: இந்த அறிவிப்பை உடனடியாக பிரதமரும் மத்திய அரசும் திரும்பப் பெற வேண்டும். பொதுமக்கள் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com