எண்ணூரில் ரயில்வே பராமரிப்புப் பணிகள்: இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்

எண்ணூரில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (நவ. 11, 12) ஆகிய இரு நாள்களுக்கு
எண்ணூரில் ரயில்வே பராமரிப்புப் பணிகள்: இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்

எண்ணூரில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (நவ. 11, 12) ஆகிய இரு நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 இது குறித்து வெள்ளிக்கிழமை ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 சனி, ஞாயிறு முழுவதும் ரத்து செய்யப்படும் ரயில்கள்
 ரயில் எண் 42019: மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் ரத்து
 ரயில் எண் 42022: கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் மின்சார ரயில் ரத்து
 திருப்பி விடப்படும் ரயில்கள்
 ரயில் எண் 57240: பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரல் பாசஞ்சர் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
 ரயில் எண் 57239: சென்னை சென்ட்ரல் - கூடூர் பாசஞ்சர் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
 ரயில் எண் 42406: மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இடையிலான மின்சார ரயில் சூலூர்பேட்டை வரை மட்டுமே செல்லும்.
 ரயில் எண் 42013: மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே செல்லும்.
 ரயில் எண் 42651: வேளச்சேரி - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே செல்லும்.
 ரயில் எண் 42016: மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே செல்லும்.
 ரயில் எண் 42018: கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
 ரயில் எண் 42020: கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே செல்லும்.
 ரயில் நேரங்கள் மாற்றம்
 ரயில் எண் 42408: சூலூர்பேட்டை - மூர்மார்க்கெட் இடையே காலை 11.15 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில், 11.35 மணிக்குப் புறப்படும்.
 ரயில் எண் 12712: சென்னை சென்ட்ரல் - விஜயவாடா இடையிலான பினாகினி விரைவு பிற்பகல் 2.05 மணிக்கு பதிலாக 2.15 மணிக்குப்
 புறப்படும்.
 சனி, ஞாயிறு சிறப்பு பாசஞ்சர் ரயில்கள்
 கும்மிடிப்பூண்டி - மீஞ்சூர் இடையே காலை 9.50 மற்றும் 10.50 மணிக்கு சிறப்பு பாசஞ்சர் ரயில் இயக்கப்படும்.
 மீஞ்சூர் - கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.25, 11.30 மணிக்கு சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும்.
 எண்ணூர் - மூர்மார்க்கெட் இடையே காலை 11.15 மணிக்கு சிறப்பு பாசஞ்சர் ரயில் இயக்கப்படும்.
 தாமதமாகும் ரயில் சேவைகள்:
 ரயில் எண் 12711: விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி விரைவு மீஞ்சூரில் 45 நிமிஷம் நிறுத்தப்
 படும்.
 ரயில் எண் 12296: தானாபூர் - பெங்களூர் சங்கமித்ரா விரைவு பொன்னேரியில் 35 நிமிஷம் நிறுத்தப்
 படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com