மரகதம் சந்திரசேகரின் பிறந்த நாள் விழா: ப.சிதம்பரம் பங்கேற்கிறார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மரகதம் சந்திரசேகரின் 100-ஆவது பிறந்த நாள் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்க உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மரகதம் சந்திரசேகரின் 100-ஆவது பிறந்த நாள் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்க உள்ளார்.
 காங்கிரஸ் சார்பில் மரகதம் சந்திரசேகரின் 100-ஆவது பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை (நவ.11) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை வகிக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் , கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com