'சென்னை ரயில்வே கோட்டத்தில் ஓராண்டில் 3,500 குழந்தைகள் மீட்பு'

சென்னை ரயில்வே கோட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 3,500 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ஜார்ஜி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 3,500 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ஜார்ஜி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை குழந்தைகளுக்கான உதவி எண் 1098 மற்றும் தகவல்களைத் தரும் கியாஸ்க் இயந்திரத்தைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது: 
ரயில் நிலையத்தில் குழந்தைகள் தொலைவது அல்லது அவர்கள் கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. தொலைந்து அல்லது கடத்தப்படும் குழந்தைகள் சமூக விரோதிகளின் கையில் சிக்கி அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.
அண்மையில் அரக்கோணத்தில் ரயில் கொள்ளையர்களைத் தேடும் பணியில் இருந்தபோது 16 வயது மாணவன் பிடிபட்டான். குடும்பப் பிரச்னையால் வீட்டிலிருந்து வெளியேறிய போது திருடர்களிடம் சிக்கியதாகவும் தங்கள் திருட்டுத் தொழிலுக்குப் பயன்படுத்தியதாகவும் கூறினான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில் கொள்ளை தொடர்பாக 7 கொள்ளையர்கள் ரயில்வே போலீஸாரால் கடலூரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 குழந்தைகள் மீட்டோம். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அருணோதயா குழந்தைகள் உதவி மையம் மூலமாக 1000 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 70 சதவீதத்தினர் ஆண்கள் என்றார் ஜார்ஜி ஜார்ஜ்.
ரயில்வே போலீஸ் துணை கண்காணிப்பாளர் டி.சரவணன், எழும்பூர் ரயில் நிலைய மேலாளர் ஜி.பிரபாகர், அருணோதயா தொண்டு நிறுவன செயல் இயக்குநர் டி.சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com