வெட்டிய மரங்களுக்கு பதிலாக 65 ஆயிரம் மரக்கன்றுகள்: மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நட்டு பராமரிப்பு

மெட்ரோ ரயில் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சென்னை முழுவதும் 65 ஆயிரத்து 637 மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் சென்னை புழல் சிறையில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரங்கள்.
மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் சென்னை புழல் சிறையில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரங்கள்.

மெட்ரோ ரயில் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சென்னை முழுவதும் 65 ஆயிரத்து 637 மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மரம் வளர்க்க ஆர்வமுள்ளவர்களுக்கு, இலவசமாக மரக்கன்றுகள் தரப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியது: மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டன. அப்போது, ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்கு ஈடாக 10 மரக் கன்றுகள் நடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. மெட்ரோ ரயில் பணிக்கு ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்கு ஈடாக 12 மரக் கன்றுகளை நட்டு வளர்க்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆண்டுக்கு 15,000 மரக் கன்றுகள் நடப்பட்டு, அவற்றை இலவசமாகப் பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில், 2011-2012 ஆ ம் ஆண்டில், தனியார் ஒப்பந்ததாரர் மூலம் 10,226 மரக்கன்றுகளும், 2012- 2013 ஆம் ஆண்டில், 13,774 மரக்கன்றுகளும் நடப்பட்டன. அதன் பிறகும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மரக் கன்றுகள் நடப்பட்டன. இப்போது வனத்துறையுடன் இணைந்து, 15 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. 
எங்கெல்லாம் அதிகமான மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன? புழல் சிறையில் 4000, அதற்கு அடுத்தபடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 1226, மதுரவாயிலில் 821, ஏசிஎஸ் கல்லூரியில் 100, திருவேற்காடு 613, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 420, கொடுங்கையூரில் 850, பிராட்வே 150, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் 420 எனப் பல்வேறு பகுதிகள் தொடர்ந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com