'படிக்கும்போதே சொந்த தொழில் ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள்'

வணிக மேலாண்மைக் கல்வி பயிலும் மாணவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போதே சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சாய்ராம் பொறியியல் கல்லூரி முன்னாள்
'படிக்கும்போதே சொந்த தொழில் ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள்'

வணிக மேலாண்மைக் கல்வி பயிலும் மாணவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போதே சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சாய்ராம் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவரும், வெப் பூம்பா டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன இயக்குநர் சரத் ரவிக்குமார் கூறினார்.
மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி வணிக மேலாண் துறை சார்பில் இளம் தொழில் அதிபர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அவர் மேலும் பேசியது:
வணிக மேலாண் படிப்பில் சேர்ந்த முதல் வருடமே என்ன வேலைக்குச் செல்லலாம் என்று யோசிக்காமல், சொந்தமாக என்ன தொழில் தொடங்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கி விட்டேன்.
படிப்பை நிறைவு செய்தபோது 25 தொழில்களுக்கான திட்ட அறிக்கைகளைத் தயார் செய்து வைத்து இருந்தேன். என்னுடன் படித்த நண்பர்கள் எஸ்.வருண்குமார், கே.துரைராஜூ ஆகியோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழிலில் ஆர்வம் இருந்தததால் மூவரும் இணைந்து வெப் பூம்பா நிறுவனத்தைத் தொடங்கினோம்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் குறைந்த செலவில் வாடிக்கையாளர்களைத் தேடித் தருவது தான் எங்களது தொழில். தற்போது கட்டுமானம், ஆட்டோமொபைல், கல்வி உள்ளிட்ட 16 பிரபல நிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
எங்கள் சேவையில் திருப்தி அடைந்த நிறுவனங்கள் எங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தருவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
எல்லோருக்கும் அனைத்து வித வாய்ப்புகளும் இந்த பூமியில் கொட்டிக் கிடக்கின்றன என்பதே நாங்கள் வருங்கால தொழில் முனைவோருக்குக் கூற விரும்பும் அறிவுரை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com