தீபாவளி பண்டிகை: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: அறியாமையின் இருள் போக்கி சுய முன்னேற்றம், அகந்தை, வெறுப்புகளைக் களைவதை தீபாவளி உணர்த்துகிறது. இந்தத் தீப ஒளித் திருநாளில் தீமை விலகி, சகோதரத்துவம் வலுப்பெற்று, தூய்மையான இந்தியாவைக் கட்டமைக்க உறுதியேற்போம். தமிழக மக்கள் அனைவருக்கு எனது உளங்கனித்த பசுமை தீபாவளி நல்வாழ்த்துகள்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: கொடுஞ்செயல்களால் மக்களைப் பெருந்துன்பத்துக்கு ஆளாக்கிய கொடிய அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. மறம் வீழ்ந்து, அறம் வென்ற நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி விளங்குகிறது.
தீபத் திருநாளன்று, மக்கள் அதிகாலை கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாகக் கருதப்படும் தீபாவளி எண்ணெய்க் குளியல் முடித்து, புதிய ஆடைகளை அணிந்து, தீபாவளி என்ற சொல்லின் பொருளுக்கேற்ப இல்லங்களில் வரிசையாக தீப விளக்கேற்றி, தங்கள் வாழ்வு சிறக்க கடவுளை வணங்கி, பலவகையான இனிப்புகளையும் பலகாரங்களையும் நண்பர்களோடும் உறவினர்களோடும் பகிர்ந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை தங்கள் உற்றார் உறவினர்களுடன் கோலாகலமாகக் கொண்டாடுவர்.
இந்தத் தித்திக்கும் தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும், இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும். அனைவருக்கும் எனது உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com