அம்பத்தூரில் இன்று இலவச மருத்துவ முகாம்

அம்பத்தூரில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப்டம்பர் 16) நடைபெறுகிறது.

அம்பத்தூரில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப்டம்பர் 16) நடைபெறுகிறது.
அம்பத்தூர் வரதராஜபுரம் ஜெயின் பவனில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை, எஸ்.வி.எஸ்.ஜெயின் சங்கமும், வடபழனி சிம்ஸ் மருத்துவமனையும் இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்துகின்றன.
முகாமில் சர்க்கரை நோய், இதய நோய், காச நோய், மலேரியா, ரத்த சோகை, உயர் ரத்த அழுத்த பாதிப்பு, கருப்பை வாய்ப் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு , டெங்கு காய்ச்சல், சிக்குன்குன்யா உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தொடர்புக்கு: 97909 35135, 98405 89998.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com