புதுமை தொழில்நுட்பக் கண்டுபிடிப்புப் போட்டி: பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரிக்கு முதல் பரிசு

சென்னை மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய அளவிலான பொறியியல் மாணவர்களுக்கான புதுமை தொழில்நுட்பப் போட்டியில், கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி

சென்னை மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய அளவிலான பொறியியல் மாணவர்களுக்கான புதுமை தொழில்நுட்பப் போட்டியில், கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி மாணவிகளின் "ஸ்மார்ட் லைசன்ஸ்' கண்டுபிடிப்பு முதல் பரிசை வென்றுள்ளது.
பெங்களூரு பயான்சி நிறுவனம், தேசிய மென்பொருள் சேவை நிறுவனங்கள் அமைப்புடன் "நாஸ்காம்' இணைந்து ஆண்டுதோறும் , அகில இந்திய அளவிலான பொறியியல் மாணவர்களுக்கான புதுமை தொழில்நுட்பக் கண்டுபிடிப்புப் போட்டியை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்பு குறித்த திட்ட விளக்கத்தை இணையதளம் மூலம் சமர்ப்பித்தனர்.
அவற்றில் பஞ்சாப், ஆந்திரம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 15 பொறியியல் மாணவர்களின் புதுமை தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டன. இறுதிச் சுற்று போட்டி, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியின் உயிரி மருத்துவத் துறை மாணவிகள் ஏ.கவிப்பிரியா, சுஜித்ரா, இப்திசம் பானு ஆகியோரின் கண்டுபிடிப்பான, லைசென்ஸ் கார்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே வாகனம் இயங்கும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு சிறந்த கண்டுபிடிப்பாக நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, அதற்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது.
சாய்ராம் பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவிகள் மகாலட்சுமி, சிந்து, நிவேதா ஆகியோரின் கண்டுபிடிப்பான நோயாளிகளை தூய்மையாகப் பராமரிக்கும் கண்டுபிடிப்புக்கு இரண்டாவது பரிசாக ரூ.20 ஆயிரமும், சென்னை ராஜலட்சுமி, வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு மூன்றாவது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களை, சாய்ராம் பொறியியல் கல்லூரி தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, பயான்சி நிறுவனர் மஞ்சுநாத் ஹெப்பர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com