ரூ.52 லட்சத்தில் ஐ.சி.எஃப். ஏரி புனரமைப்பு

சென்னை ஐ.சி.எஃப்.-க்கு சொந்தமான ஏரியை ரூ.52 லட்சத்தில் புனரமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை மாலை ஐ.சி.எஃப். பொது மேலாளர் எஸ்.மாணி தொடங்கி வைத்தார்.

சென்னை ஐ.சி.எஃப்.-க்கு சொந்தமான ஏரியை ரூ.52 லட்சத்தில் புனரமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை மாலை ஐ.சி.எஃப். பொது மேலாளர் எஸ்.மாணி தொடங்கி வைத்தார்.
சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 19 ஆம் நூற்றாண்டில் இருந்தே அந்தப் பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு இருந்து வருகிறது. 1950-ஆம் ஆண்டில் அந்தப் பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, ஐ.சி.எப். குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வந்தது. அதன், பின் பல்வேறு காரணங்களினால் இந்த ஏரி மாசடைந்தது. பின்பு, இந்த ஏரியில் உள்ள நீர், தோட்டப் பராமரிப்புகளுக்கும், தொழிற்சாலை கழிவுகளை சுத்தம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
இப்போதிருக்கும் குடிநீர் தேவையையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு இந்த ஏரியை புனரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, ரூ.52 லட்சம் செலவில் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. இந்த ஏரி 25 ஏக்கர் பரப்பளவும் 24 அடி ஆழமும் கொண்டது. முதலில் இந்த ஏரியில் இப்போதுள்ள நீர் வெளியேற்றப்படவுள்ளது. இதன் அடுத்தகட்டமாக ஏரி தூர்வாரப்படவிருக்கிறது. பின்பு, ஏரியின் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் தேவையில்லாத செடிகள் அப்புறப்படுத்தப்படும். இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட செடிகள் பதப்படுத்தப்பட்டு, உரமாக்கப்படும். பின்பு புதிய நீர் ஆதாரங்கள் உருவானதும், மீன்கள் வளர்த்து ஏரியில் விடப்படும். இதன் மூலம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்து செல்ல ஏதுவாக அமையும். இறுதிக்கட்டமாக ஏரியைச் சுற்றி நடைபாதை அமைக்கப்படும்.
இது நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வசதியாக இருக்கும். இந்தப் பணிகள் மூலம் ஏரியைச் சுற்றியுள்ள சுற்றுச் சூழல் பாதுகாப்படையும். இந்தப் பணிகள் அனைத்தும் நவம்பர் மாதத்துக்குள் முடிக்க ஐ.சி.எஃப். நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com