பதிப்பாளர்கள் பொது நூலக இயக்ககத்துக்கு நூல்களை அனுப்ப ஏப்.27 வரை கால நீட்டிப்பு

தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல்களை வாங்குவதற்காக பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மாதிரி நூல்களை பொது நூலகத்துக்கு அனுப்ப வரும் 27 -ஆம் தேதி வரை (ஏப்.27

தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல்களை வாங்குவதற்காக பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மாதிரி நூல்களை பொது நூலகத்துக்கு அனுப்ப வரும் 27 -ஆம் தேதி வரை (ஏப்.27) கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து பொது நூலக இயக்குநர் ராமேஸ்வர முருகன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:-
தமிழக அரசு பொது நூலக இயக்ககத்தின்கீழ் செயல்பட்டு வரும் நூலகங்களுக்கு 2016, 2017 -ஆம் ஆண்டுகளில் பதிப்பான தமிழ், ஆங்கில நூல்கள் வாங்க பதிப்பாளர்கள், விற்பனையாளர்களிடம் இருந்து நூல்கள் பரிசீலனைக்காக வரவேற்கப்படுகின்றன.
பரிசீலனைக்குப் பெறப்படும் எல்லா நூல்களும் வாங்குவதற்கில்லை; அரசின் சார்பில் அமைக்கப்பட்ட நூல் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் மட்டுமே வாங்கப்படும். கடந்த 2016, 2017-ஆம் ஆண்டுகளில் பதிப்பான நூல்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பிற ஆண்டு நூல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது,
மாதிரி நூல்களை ஏ, பி, சி, (குறுந்தகட்டுடன்) படிவங்களுடன் ''பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணாசாலை, சென்னை- 600002'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நூல் பதிவு கட்டண விவரம், நூல்கள் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள், நிபந்தனைகள் www.tnpubliclibraries.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
முன்னதாக, ஏப்ரல் 19 -ஆம் தேதிக்குள் நூல்களை அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்களின் வேண்டுகோளை ஏற்று தற்போது ஏப்ரல் 27-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com