நகைக் கடை கொள்ளை வழக்கு: நாதுராம் குஜராத்தில் கைது

சென்னை நகைக் கடை கொள்ளையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம் குஜராத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
நகைக் கடை கொள்ளை வழக்கு: நாதுராம் குஜராத்தில் கைது

சென்னை நகைக் கடை கொள்ளையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம் குஜராத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாதூராம் தலைமையிலான கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் பதுங்கி இருந்த கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது, துப்பாக்கியால் சுடப்பட்டு கடந்த டிசம்பர் 13}ஆம் தேதி அதிகாலை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அந்த தனிப்படை போலீஸார் சென்னை திரும்பியதால், கொள்ளையர்களைப் பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், அண்மையில் நாதுராம் கைத் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற படம் முகநூலில் பரவியது. இதைத் தொடர்ந்து, சென்னை தனிப்படை போலீஸார் மீண்டும் ராஜஸ்தானுக்கு விரைந்தனர்.
குஜராத்தில் நாதுராம் கைது: இந்நிலையில், பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் தலைமையிலான போலீஸார் நாதுராமைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதில், அவர் குஜராத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற ராஜஸ்தான் போலீஸார் நாதுராமை சனிக்கிழமை கைது செய்தனர். ராஜஸ்தான் மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நாதுராமை சென்னை கொண்டு வர தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருவதாக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com