புத்தகக் காட்சி 2018: என்னைக் கவர்ந்த புத்தகம்

எஸ். சூர்யா : புதுச்சேரியிலிருந்து என் தோழிகளுடன் வந்திருக்கிறேன். யுபிஎஸ்சி தேர்வு எழுதவுள்ளேன். அது தொடர்பான புத்தகங்கள் ஒரு சில அங்கு கிடைக்கவில்லை.

எஸ். சூர்யா : புதுச்சேரியிலிருந்து என் தோழிகளுடன் வந்திருக்கிறேன். யுபிஎஸ்சி தேர்வு எழுதவுள்ளேன். அது தொடர்பான புத்தகங்கள் ஒரு சில அங்கு கிடைக்கவில்லை. இந்த புத்தகக் காட்சிக்கு வந்தால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தோம். நாங்கள் தேடி வந்த புத்தகம் கிடைத்துவிட்டது. இங்கே அதிக அளவில் அரங்குகள் உள்ளன. குவியலாகக் கொட்டிக் கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது நிறைய யோசனைகள் கிடைக்கின்றன. பொழுதுபோக்கு அம்சங்களுக்கு செலவிடுவதைக் காட்டிலும் புத்தகம் வாங்குவதற்கு செலவு செய்வது பயனுள்ளதாக இருக்கும். 

கார்த்திக் : நான் கல்லூரிப் பருவத்திலிருந்து கடந்த 15 ஆண்டுகளாக இப்புத்தகக் கண்காட்சிக்கு வந்து கொண்டிருக்கிறேன். தற்போது என் மனைவி குழந்தையுடன் வந்துள்ளேன். இன்று நான் வாங்கிய புத்தகம் "இன்றும் என்றும் பெரியார்' இதைத் தவிர என் மனைவிக்கும், குழந்தைக்கும் பிடித்தமான சில புத்தகங்களையும் வாங்கியுள்ளேன். 

பள்ளி மாணவர் கார்த்திக் கமல்: என்னை கவர்ந்த புத்தகம் "101 சயின்ஸ் எக்ஸ்பெரிமென்ட்'. ஓய்வு நேரத்தில் அறிவியல் தொடர்பான ஆய்வு செய்வது நான் விரும்பிய ஒன்று. அதற்கு இந்த புத்தகம் பயன்படும் . என்னைவிட என் அப்பா நிறைய புத்தகங்களை 
வாங்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com