13 பூங்காக்கள்-சிறுவர் விளையாட்டு மைதானங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 13 பூங்காக்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 13 பூங்காக்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:-
சென்னை மாநகராட்சியின் முகலிவாக்கம் சந்தோஷ் நகர் ராமச்சந்திரன் தெரு, திருவொற்றியூர் எண்ணூர் சுனாமி குடியிருப்பு ஏஐஆர் நகர், பாலகிருஷ்ணா நகர், மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட புழல் -வெஜிடேரியன் வில்லேஜ், கங்காதரன் தெரு, புத்தகரம் -சூரப்பட்டு, கதிர்வேடு -பத்மாவதி நகர் சர்வீஸ் சாலை-பிர்லா அவென்யு, கதிர்வேடு-பத்மாவதி நகர் 7 -வது தெரு, பொன்னியம்மன் மேடு -தணிகாசலம் நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட 6 பூங்காக்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், அம்பத்தூர் முகப்பேர் - திருமங்கலம் பிரதான சாலை, விஜிபி நகர், வீரமாமுனிவர் தெரு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 3 பூங்காக்கள், ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட முகலிவாக்கம்-அன்னை வேளாங்கண்ணி நகர் பேஸ்-2, சோழிங்கநல்லூர்-ராஜீவ்காந்தி சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட 2 பூங்காக்கள், அம்பத்தூர் டிவிஎஸ் காலனி 45 -ஆவது தெரு, ஆபீசர்ஸ் காலனி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு மைதானங்கள், பாடி புதுநகர் பிரதான சாலையில் கட்டப்பட்ட வார்டு அலுவலகக் கட்டடம், பாடி குப்பம் பிரதான சாலையில் கட்டப்பட்ட வார்டு, பகுதி அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றையும் முதல்வர் திறந்தார்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் சூரப்பட்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், புத்தகரம், கதிர்வேடு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com