சென்னை - கொல்லம் இடையே சிறப்புக் கட்டண ரயில்கள்: டிச.3 முதல் இயக்கம்

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்வதைக் கருத்தில் கொண்டு, சென்னை சென்ட்ரல், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்வதைக் கருத்தில் கொண்டு, சென்னை சென்ட்ரல், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து கொல்லத்துக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் ஜனவரி 2, 7, 9, 14 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கு இரவு 8.40 மணிக்கு இந்த சிறப்புக் கட்டண ரயில் புறப்படும். மறுநாள் மதியம் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
அதேபோல், கொல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு டிசம்பர் 4, 6, 11, 13, 18, 20, 27 மற்றும் ஜனவரி 3, 8, 10 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில், அடுத்த நாள் காலை 9.45 சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
சிறப்புக் கட்டண ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தபாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கனச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவெளிக்காரா, காயங்குளம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
தாம்பரத்திலிருந்து: இதேபோல், தாம்பரத்திலிருந்து கொல்லத்துக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
அதன்படி, தாம்பரத்திலிருந்து ஜனவரி 2, 4, 7, 9, 16, 18, 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 5.15-க்கு கொல்லத்துக்கு புறப்பட்டுச் செல்லும். மறுநாள் காலை 9.20-க்கு இந்த ரயில் கொல்லத்தை சென்றடையும். மறுமுனையில், கொல்லத்திலிருந்து ஜனவரி 3, 5, 8, 10, 12, 22, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு மறுநாள் பிற்பகல் 3.30 மணியளவில் சிறப்பு ரயில் வந்தடையும். 
செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், பம்பா கோயில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தேன்மலை, எடமான், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்காரா, குந்தாரா ஆகிய இடங்களில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும். இந்த சிறப்புக் கட்டண ரயிலுக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com