கருப்புப்பண விவகாரம்: விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு விலக்கு நீட்டிப்பு

கருப்புப் பண விவகாரம் தொடர்பாக, எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணைக்கு நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர்

கருப்புப் பண விவகாரம் தொடர்பாக, எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணைக்கு நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் நேரில் ஆஜராவதிலிருந்து அளித்திருந்த விலக்கை நவம்பர் 2 -ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் வாங்கிய சொத்துகளின் விவரங்களை, அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கில் காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
 இதனையடுத்து அவர்கள், பிரிட்டனில் ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பிலான இரண்டு சொத்துகள், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியது தொடர்பாக கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித் துறை வழக்குப்பதிவு செய்தது.
 இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தங்களுக்கு விலக்கு அளிக்க கோரி நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து அக்டோபர் 12 -ஆம் தேதி வரை விலக்களித்து உத்தரவிட்டிருந்தது.
 இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணைக்காக, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் வரும் நவம்பர் 2 -ஆம் தேதி வரை ஆஜராவதிலிருந்து விலக்களித்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com