எளாவூரில் ரயில்வே மேம்பாலம் திறக்கக் கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்கக் கோரி பாமகவினர் கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்கக் கோரி பாமகவினர் கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர்-சுண்ணாம்புகுளம் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு இரு ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் எளாவூர், மெதிப்பாளையம், வல்லம்பேடு, சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், சாலையன் கண்டிகை, துராப்பள்ளம், கொக்கு பாளையம், சின்ன மாங்கோடு, காரைக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ரயில்வே கேட்டை திறந்தபின், அதன் வழியே சென்று வருவதற்கு அதிக நேரம் காத்திருக்கும் நிலை இருப்பதாகத் தெரிகிறது. மேலும் ரயில்வே மேம்பாலம் திறக்கப்படாததால் இப்பகுதி வழியே செல்லும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் அனைத்தும் ரயில்வே கேட்டை திறக்கும் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்பாலத்தை திறக்கக் கோரி பாமகவினர் கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் மா.செல்வராஜ் தலைமை வகித்தார். பாமக நிர்வாகிகள் சு.வே.ரவி, சக்கரை, குபேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மேம்பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்காததாகக் கூறியும், அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மேம்பாலத்தை விரைந்து திறக்க வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com