மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியை, ஆசிரியை இடையே கை கலப்பு

திருவள்ளூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கண் முன்னே தலைமை ஆசிரியை, ஆசிரியைகளுக்கிடையே கை கலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கண் முன்னே தலைமை ஆசிரியை, ஆசிரியைகளுக்கிடையே கை கலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் நகராட்சி தொடக்கப் பள்ளி பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திங்கள்கிழமை காலை வழக்கம் போல் மாணவர்கள் வரிசையில் நின்றபடி இறைவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை ஒருவரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னை தரக்குறைவாக பேசுவதை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக அந்த ஆசிரியை செல்லிடப்பேசியில் விடியோ எடுக்க முயற்சித்ததாகத் தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை மாணவர்கள் முன்னிலையில் அந்த ஆசிரியையை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்க முயன்ற சக ஆசிரியைகளையும் தலைமை ஆசிரியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆசிரியை ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
தகவலறிந்த தொடக்கக் கல்வி அலுவலர் குமாரசாமி பள்ளிக்கு வந்து இரு தரப்பினரிடையே விசாரணை நடத்தினார். போலீஸாரும் நேரில் விசாரணை நடத்தினர்.
பின்னர் இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வி அலுவலர் குமாரசாமி தெரிவித்தார்.
படம் எண் :19ற்ப்ழ்ள்ஸ்ரீட்: ஆசிரியை, தலைமை ஆசிரியை இடையெ ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்திய மாவட்டக் கல்வி அலுவலர் குமாரசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com