இரண்டாவது நாளாக மறியல்: சத்துணவு ஊழியர்கள் 160 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் இரண்டாவது நாளாக திருவள்ளூரில் புதன்கிழமையும் மறியல்
திருவள்ளூரில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.
திருவள்ளூரில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் இரண்டாவது நாளாக திருவள்ளூரில் புதன்கிழமையும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பெண் ஊழியர்கள் 112 பேர் உள்பட 160 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்புடன் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தப் பணிக்கொடை ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் இரண்டாவது நாளாக திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் எம்.சத்தியநாதன், இணைச் செயலாளர் எம்.பாபு, மாநிலப் பொருளாளர் சுந்தராம்பாள் உள்பட 112 பெண் ஊழியர்கள் உள்பட 160 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com