கருவேல மரம் ஒழிப்பு குறித்த குறுந்தகடு வெளியீடு

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் காந்தி உலக மையத்தின் சார்பில் "கருவேல மரத்தை கருவறுப்போம்' என்ற ஆவணப்பட குறுந்தகடு வெளியீட்டு விழா கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் காந்தி உலக மையத்தின் சார்பில் "கருவேல மரத்தை கருவறுப்போம்' என்ற ஆவணப்பட குறுந்தகடு வெளியீட்டு விழா கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
இந்த அமைப்பின் சார்பில், கருவேல மரங்கள் அழிக்கும் பணி மார்ச் 12 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இதன் ஒரு கட்டமாக கருவேல மரத்தை கருவறுப்போம் என்ற ஆவணப்படம்  காந்தி உலக மையத்தால் தயாரிக்கப்பட்டு, அந்த குறுந்தகட்டின் வெளியீட்டு விழா கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு காந்தி உலக மையத்தின் நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் விஜயலட்சுமி, சாமிநாதன், பிரதாப், லட்சுமணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திரைப்பட நடிகர் தாமு ஆவணப் பட குறுந்தகடை வெளியிட, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. மாணிக்கவேல் பெற்றுக் கொண்டார்.
இந்த ஆவணப் படத்தை கிராமங்கள்தோறும் காந்தி உலக மையத்தினர் திரையிட்டுக் காண்பித்து கருவேல மரத்தின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, அவற்றை ஒழிக்கும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக அதன் நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com