பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு

அம்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்களின் தரம், பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

அம்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்களின் தரம், பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
அம்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் 29 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு மொத்தம் 90 வாகனங்கள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி.துரை தலைமையில், பொன்னேரி துணைக் கல்வி அதிகாரி கெங்காரெட்டி, மோட்டார் வாகன ஆய்வாளர் யு.ரவிகுமார், வாகன போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பள்ளி வாகனங்களின் தரம், பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தனர்.
விதிமுறைப்படி ஒரு வாகனத்தின் படிகட்டு தரையிலிருந்து 29 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும் ஆனால், ஆய்வுக்கு வந்த ஒரு வாகனத்தில் 40 செ.மீ. உயரத்தில் முதல் படிகட்டு இருந்தது. இதனால் அந்த வாகனத்துக்கு தடையில்லா சான்று வழங்க அனுமதி மறுக்கப்பட்டது.
மற்றொரு வாகனத்தில் முதலுதவிப் பெட்டி இல்லாததாலும், வேறொரு வாகனத்தில் வர்ணப்பூச்சு முடிக்கப்படாமல் இருந்ததாலும் அவை திருப்பி அனுப்பப் பட்டன.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி.துரை, பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களிடையே பேசியதாவது:
பள்ளி வாகன ஓட்டுநர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். வாகன விபத்து பெரும் துயரம்.
குறிப்பாக பள்ளி வாகன விபத்து என்பது ஒருதலைமுறையே துக்கத்தில் ஆழ்த்தும். பெற்றோர் தங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையே மகன், மகள் மீதுதான் வைத்துள்ளனர். எனவே, பள்ளி வாகன ஓட்டுநர்கள் பொறுப்புடனும், ஒழுக்கமுடனும் நடந்து கொள்ளவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com