காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 14,624 பேர் பங்கேற்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 14,624 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 14,624 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2-ஆம் நிலை காவலர், 2-ஆம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 9 மையங்களில் 14,624 பேர் தேர்வெழுதினர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் வேப்பம்பட்டு, அரண்வாயல் குப்பம், காக்களூர், திருவள்ளூர், திருப்பாச்சூர், பாண்டூர், கொழுந்தலூர் உள்ளிட்ட 9 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
பைகள், புத்தகங்கள், செல்லிடப்பேசி, கால்குலேட்டர், ப்ளுடூத், கைக்கடிகாரம் போன்ற பொருள்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும்  ஒரு டி.எஸ்.பி., 3 காவல் ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள், 50 போலீஸார் கொண்ட குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேர்வு தொடங்கியது முதல் முடியும் வரை அனைத்தும் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.  தேர்வில் 80 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்காக 4 விதமான கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால், அருகில் இருப்பவர்களை பார்த்து எழுத முடியாது என்றார்.  
இந்நிலையில், பாண்டூரில் உள்ள இந்திரா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை தமிழ்நாடு காவல் உயர்மட்ட பயிற்சியகத்தின் தலைவர் அறிவுச்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com