மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு

பொன்னேரி அருகே பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி அருகே பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி, தடப்பெரும்பாக்கம் பகுதியில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 6 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், தடப்பெரும்பாக்கத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள தனியார் இடத்தில் கடந்த 11-ஆம் தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
தேசிய, மாநில நெடுஞ்சாலையில் இருந்து 500 மீ. தொலைவுக்குள் டாஸ்மாக் கடை இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தடப்பெரும்பாக்கத்தில் டாஸ்மாக் கடையின் முன்புற வழியை அடைத்துவிட்டு, பின்புறம் உள்ள பாதையை பயன்படுத்தும் வகையில் நூதன முறையில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தடப்பெரும்பாக்கம் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர், இந்த கடையை மூடக்கோரி, கடந்த 13-ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது  பொன்னேரி வருவாய்துறை அதிகாரிகள், போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடைக்கு "சீல்' வைத்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி, மூடப்பட்ட டாஸ்மாக் கடை வியாழக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உச்சநீதிமன்ற உத்தரவு, ஊராட்சி தீர்மானம், பொதுமக்களின் எதிர்ப்பு ஆகியவற்றை குறிப்பிட்டு, பொன்னேரி சார் ஆட்சியர் தண்டபாணியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com