குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து கிராம மக்கள் மனு

சீராக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மடிமை கண்டிகை கிராம மக்கள், காலி குடங்களுடன் வந்து வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

சீராக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மடிமை கண்டிகை கிராம மக்கள், காலி குடங்களுடன் வந்து வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
 பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியம், வஞ்சிவாக்கம் ஊராட்சியில், மடிமைகண்டிகை உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வரும் நீரின் தன்மை மாறியதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து 3 கி. மீ. தூரமுள்ள தேவரஞ்சேரி கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து மடிமை கண்டிகை கிராமத்துக்கு பைப் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்குள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் சேகரித்து வைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே குடிநீர் கொண்டு செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள பைப்கள் தரமானதாக இல்லாததால் அவ்வப்போது ஆங்காங்கே பைப் உடைந்து குடிநீர் வீணாவதுடன் மடிமை கண்டிகைக்கும் குடிநீர் செல்வதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சீரான குடிநீர் விநியோகம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து வஞ்சிவாக்கம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்கின்றனர்.
 இதையடுத்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் காலி குடங்களுடன் 4 டிராக்டர்களில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர்.
 பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவனிடம் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர். அதனைப் பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com