கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.1,932 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் செல்லூர் கே.ராஜு தகவல்

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தமிழகம் முழுவதும் ரூ.1,932 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார். 
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.1,932 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் செல்லூர் கே.ராஜு தகவல்

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தமிழகம் முழுவதும் ரூ.1,932 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார். 
சென்னை மாதவரம் பால் பண்ணையில் உள்ள விவசாயக் கூட்டுறவு பணியாளர் பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதில், அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது:
தமிழக அரசு விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் உயர பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் குழு கடன், சிறு வணிகக் கடன், மாற்றுத் திறனாளிக்கான கடன், வீடு கட்ட கடன் என பல்வேறு கடன் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது, கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1,932.04 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5,63,456 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,762.45 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. 
கடந்த 3 ஆண்டுகளில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.3,588.68 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் குமார்ஜெயந்த், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜி.கே.அருண்சுந்தர் தயாளன், தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர்கள், கூடுதல் பதிவாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன், சிவன், காவல் கண்காணிப்பாளர் (வணிக குற்றப்புலனாய்வு துறை) பி.கே.செந்தில்குமாரி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குநர் யூஜின், மண்டல இணைப்பதிவாளர்கள், சரகத் துணை பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com