போலி ஆவணம் மூலம் ரூ.50 லட்சம் நில மோசடி : 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து, ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
போலி ஆவணம் மூலம் ரூ.50 லட்சம் நில மோசடி : 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து, ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன் மனைவி பானுமதி (40). இவருக்கு சொந்தமாக திருவள்ளூரை அடுத்த பெரியகளக்காட்டூர் கிராமத்தில் 78 சென்ட் நிலம் உள்ளது. அதேபோல், இதே சர்வே எண்ணில் அருணகிரி என்பவரது மனைவி சாந்திக்கு 79 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, தொழுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த வீரராகவனுக்கு (49) வீட்டு மனைகளாக பிரித்து, சாந்தி விற்பனை செய்தாராம். 
இந்நிலையில், வீரராகவன், சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பாபா ராலிஸ் ஆப்ரகாமின் (58) உதவியோடு போலி ஆவணம் தயார் செய்து, அருகில் இருந்த பானுமதியின் 78 சென்ட் நிலத்தையும் அபகரித்து வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்தததாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
இது குறித்து அறிந்த பானுமதி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் இந்த மோசடி குறித்து புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, வீரராகவன், பாபா ராலிஸ் ஆப்ரகாம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com