இன்று திருவள்ளூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை

இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 20) நடைபெறும் என்று ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.  
இது குறித்து ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 
இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 20) நடைபெறவுள்ள முகாமில் பத்தாம் வகுப்பு , தொழிற்பயிற்சி, பட்டயம் , பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம். வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
மேலும், குளிர்சாதன இயந்திர பழுது நீக்கம், தையல் பயிற்சி, எலெக்ட்ரீசியன் ஆகிய பிரிவுகளில் திறன் வளர்ப்பு பயிற்சிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வயது வரம்பு: 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த முகாமில் பிரசித்தி பெற்ற தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். இதில் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.11,500 வரையில் ஊதியம் வழங்கப்பட இருக்கிறது .
அத்துடன், இருப்பிடத்தில் இருந்து பயிற்சி நிலையம் சென்று வரும் போக்குவரத்து செலவிற்கு நாள்தோறும் ரூ.100 வழங்கப்பட இருக்கிறது. அதனால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் தொழிலில் திறன் வளர்ப்பு பயிற்சி பெற்று, அதைத் தொடர்ந்து வேலைவாய்ப்பும் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com