காவல் உதவி ஆய்வாளர் மகனை கொல்ல முயற்சி: 6 பேர் கைது

செங்குன்றத்தில் காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட 2 பேரைக் கொலை செய்ய முயன்றது தொடர்பான வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவல் உதவி ஆய்வாளர் மகனை கொல்ல முயற்சி: 6 பேர் கைது

செங்குன்றத்தில் காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட 2 பேரைக் கொலை செய்ய முயன்றது தொடர்பான வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் கேசவன். இவர் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்தோஷ்குமார்(22) சோழவரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. 
இந்நிலையில், சந்தோஷ்குமார் தன் நண்பர்களான சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (22), காவாங்கரை திருநீலகண்டன் நகரைச் சேர்ந்த இஸ்மாயில் (20), மொண்டியம்மன் நகர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த துளசிராமன்(20), செங்குன்றம் அபிராமிபுரத்தைச் சேர்ந்த புருஷோத்தமன்(24) ஆகிய நான்கு பேருடன் கடந்த 17ஆம் தேதி இரவு பாடியநல்லூர் குமரன் தெரு அருகே இருசக்கர வாகனங்களில் வந்து கொண்டிருந்தார். அதேநேரம் அப்பகுதியில், பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகரைச் சேர்ந்த சேட்டு (எ) மனோவா (15), சூர்யா (16), காந்தி நகரைச் சேர்ந்த நமச்சி என்கிற நமச்சிவாயம் (23) மற்றும் அவரது நண்பர்கள் அப்பகுதியில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்தனர். 
அப்போது அங்கு வந்த சந்தோஷ்குமார், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 
இதில் சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை அக்கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டியது. தகவல் அறிந்து செங்குன்றம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார், நாகராஜ் மற்றும் போலீஸார் விரைந்து சென்றனர். அப்போது அனைவரும் தப்பியோடி விட்டனர். 
இதனிடையே, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சந்தோஷ்குமார், கார்த்திக் ஆகியோரை போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
தப்பியோடியவர்களைப் பிடிக்க புழல் காவல் உதவி ஆணையர் பிரபாகரன் மேற்பார்வையில் ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார், தலைமைக் காவலர் பாரதிதாசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
அவர்கள், மோதலில் ஈடுபட்ட சந்தோஷ்குமார் தரப்பைச் சேர்ந்த இஸ்மாயில், துளசிராமன், புருஷோத்தமன் மற்றும் எதிர்தரப்பைச் சேர்ந்த சேட்டு என்கிற மனோவா, சூர்யா, நமச்சிவாயம் ஆகிய 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பஷீத், சாயி, கார்த்திக், உருளை வினோத் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com