ஸ்ரீநிகேதன் பள்ளி தமிழாசிரியருக்கு மதிப்புறு தமிழன் விருது

திருக்குறளின் மேன்மையை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலான பணியைப் பாராட்டி திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியின் தமிழ் ஆசிரியருக்கு மதிப்புறு தமிழன் விருது வழங்கப்பட்டது. 

திருக்குறளின் மேன்மையை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலான பணியைப் பாராட்டி திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியின் தமிழ் ஆசிரியருக்கு மதிப்புறு தமிழன் விருது வழங்கப்பட்டது. 
திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் முதன்மை தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் க.செந்தில்குமார். இவர் தமிழையும் , திருக்குறளையும் இரு கண்களாகக் கொண்டு மாணவர்களுக்கு அறிவொளி ஏற்றும் பணியை கடந்த 11 ஆண்டுகளாக செய்து வருகிறார். அத்துடன், இந்தியா மட்டுமல்லாமல் , அயல்நாடு மாணவர்கள் மத்தியிலும் மேன்மையை எடுத்துரைத்து, திருக்குறள் வழியில் நேர்மையுடனும், துணிவுடனும் வழி நடத்தி, இப்பள்ளி மாணவர்களை லிம்கா புத்தகத்திலும் இடம் பெறச் செய்துள்ளார். 
மேலும், இப்பள்ளியில் திருக்குறள் பேரவையை நிறுவி நூற்றுக்கணக்கான மாணவர்களை திருக்குறள் வழியில் வாழ்ந்து காட்டச் செய்துள்ளார். 100 சதவீதம் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறச் செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகள் வரையில் தமிழ் வளர்ச்சிப் போட்டிகளை நடத்தி, மாநில அளவில் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதுபோன்ற சேவைகளைப் பாராட்டி தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில், அதன் தேசிய தலைவர் ஜெயந்தி ராஜகோபாலன், தேசிய துணைப் பொதுச்செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் முன்னாள் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தமிழ் ஆசிரியரின் சேவையை பாராட்டி மதிப்புறு தமிழன் விருதை வழங்கி சிறப்பித்தார். 
விருது பெற்ற தமிழ் ஆசிரியரை பள்ளியின் தாளாளர் விஷ்ணு, இயக்குநர் பரணிதரன் , முதல்வர் மாலதிராயன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் பாராட்டினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com