சமத்துவப் பொங்கல் விழா

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
ராமாபுரம் ஜனனி மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இணைந்து சமத்துவப் பொங்கலைக் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் எம்.ராஜேந்திரன், குதாய் கித்மத்கர் அமைப்பின் செயலாளர் இனாமுல் ஹசன், உதவும் கரங்கள் அமைப்பின் செயலாளர் ஆனந்தியம்மாள், துணைச் செயலாளர் சந்திரகாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக சேவகர் ஏ.ஜே.முருகன் வரவேற்றார். இதில், அல் மதினா அறக்கட்டளையைச் சேர்ந்த பி.எஸ்.நாகூர் மீரான், இந்து ஆன்மிக அமைப்பைச் சேர்ந்த தாமோதரன், கிறிஸ்தவ ஊழியர் அருண்குமார் ஆகியோர் பங்கேற்று, மும்மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக பொங்கல் பரிமாறி, தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகள், உணவு வகைகள் குறித்து மருத்துவர் அப்துல் நாசர், ஆரம்பாக்கம் முன்னாள் கவுன்சிலர் சேகர், ஆந்திர மாநிலம்-தடா மண்டலத் தலைவர் செல்வி ரமேஷ் , ராமாபுரம் ஊராட்சித் தலைவர் டி.கே.சீனிவாசன் , சமூக சேவகர்கள் டி.சி.செல்வம், எஸ்.கே.சலீம், நல்லம்மா சுபேதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இதில், பல்லாங்குழி, தாயம், பாண்டி, தாண்டிக் குதித்தல், தட்டாங்கல், உறி அடித்தல் போன்ற போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக, தினகரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com