கும்மிடிப்பூண்டியில்  நாளை இலவச மருத்துவ முகாம்

கும்மிடிப்பூண்டியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெற உள்ளது.

கும்மிடிப்பூண்டியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெற உள்ளது.
சமூக மனித நேய நற்பணி மன்றத்தின் சார்பாக கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.ஆர்.கே.வணிக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த முகாமில் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் 
ஜெ.அசோக்குமார், பொது நல மருத்துவர் டாக்டர் எம்.பிரபாகர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் இடம்பெற்றுள்ளனர். 
இதில், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், சர்க்கரை நோய், கல்லீரல் நோய், தைராய்டு போன்றவற்றுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை மருத்துவர்கள் அளிக்க உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை  (ஜனவரி 21) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ள இலவச மருத்துவ முகாம் குறித்து விவரம் அறிய 9677522277 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை ராகவேந்திரா மருத்துவமனை, சென்னை கே.ஜி.ஜெ.மருத்துவமனை, வின்பாத் பரிசோதனை மற்றும் ஆரோக்கிய மையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com