புதிய பாடத் திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பங்கேற்பு

புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு நடைபெற்ற 2 நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவு பெற்றது. இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு நடைபெற்ற 2 நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவு பெற்றது. இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. ராஜேந்திரன் பங்கேற்றார்.
புதிய பாடத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பாடநூல்கள் குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 9-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 1 -ஆம் வகுப்பு பாடநூல் குறித்து பயிற்சியும், ஜி.ஆர்.டி. மகாலட்சுமி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 மற்றும் 9 -ஆம் வகுப்பு பாடநூல் குறித்த பயிற்சியும் நடைபெற்று வந்தது.
நிகழ்வில், திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் அருள்செல்வம், கேசவராஜகுப்பம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லோகமணி, பட்டதாரி ஆசிரியர் சக்கரபாணி ஆகியோர் கலந்து
கொண்டனர்.
இம்முகாமில், புதிய பாடப்புத்தகத்தின் எளிமை, பெருமை, அட்டைப் படம், கியூ ஆர் கோடு மற்றும் அதன் 6 இலக்க எண் ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்கு மாநில கருத்தாளர்கள் விஜயகுமார், சீனிவாசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் இந்நூல்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் எவ்வாறு பயன்படுத்தலாம் எனவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி நிறைவு நாளில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசியது: தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட ஐந்து பாடங்களுக்கும், ஒவ்வொரு படத்திற்கும் இரண்டு நாள்கள் வீதம் இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது.
புதிய பாடத்திட்டங்களில் கியூ ஆர் கோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியூ ஆர் கோடை செல்போனில் ஸ்கேன் செய்தால், இணையதளத்தில் அதன் விடியோ மற்றும் ஆடியோ வெளியாகும்.
உதாரணமாக 6 -ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் கும்மி அடி' என்ற பாடத்தில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், கும்மி அடிக்கும் விடியோ மற்றும் ஆடியோ வரும். அதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் காண்பிக்க வேண்டும்.
இப்படி அனைத்து பாடப்புத்தகங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் கியூ ஆர் கோடு இடம் பெற்றுள்ளது.
புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள பாடப் புத்தகம் சிறந்த வல்லுநர்களால் மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளத் தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com