9 லட்சம் பணியாளர்களின் பதிவேடு கணினிமயமாக்க நடவடிக்கை

பணிப்பளுவை குறைக்கும் வகையில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை எளிதாகப்
பூந்தமல்லியில்    நடைபெற்ற  திறனூட்டல்  மாநாட்டில் பேசிய  கருவூல மற்றும் கணக்குத் துறை ஆணையர்  தென்காசி  சு. ஜவஹர்.(கீழே) நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
பூந்தமல்லியில்    நடைபெற்ற  திறனூட்டல்  மாநாட்டில் பேசிய  கருவூல மற்றும் கணக்குத் துறை ஆணையர்  தென்காசி  சு. ஜவஹர்.(கீழே) நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.


பணிப்பளுவை குறைக்கும் வகையில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை எளிதாகப் பராமரிக்கும் வகையில் கணினிமயமாக்கப்படுவதுடன், இந்த புதிய திட்டத்தை நவம்பர்-2018 முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கருவூல மற்றும் கணக்குத் துறை ஆணையாளர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார். 
திருவள்ளூர் அருகே பூந்தமல்லி தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த அரசுப் பணியாளர்களுக்கான திறனூட்டல் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு மாநில கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் தென்காசி சு.ஜவஹர் தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழக நிதித்துறையின் கட்டுப்பாட்டில் 1962-ஆம் ஆண்டு முதல் கருவூலம் மற்றும் கணக்குத் துறை தனித் துறையாக செயல்பட்டு வருகிறது. மாநில அளவில் சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகங்கள், மாவட்டக் கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் மூலமாக 2017-2018 நிதி ஆண்டில் ரூ. 1,55,824 கோடி வரவாகவும், ரு. 1,70,256 கோடி செலவினமாகவும் அரசின் நிதி கையாளப்பட்டுள்ளது. 
அரசு நிதி மேலாண்மை தொடர்பான பணிகள் திறம்பட நடைபெறவும், கருவூலப் பணிகளை மேம்படுத்தவும் பிரத்யேகமான வழிமுறையில் மனித வள மேலாண்மையை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ. 288.91 கோடியில் அனுமதி அளித்துள்ளது. இதை அமல்படுத்துவதால் தமிழ்நாடு மற்றும் புதுதில்லியில் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகத்தில் சம்பளம் பெற்று வழங்கும் சுமார் 29 ஆயிரம் அலுவலர்கள் சம்பளம் பெற்று வழங்க பட்டியல்களை நேரடி இணையம் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்க முடியும். 
மேலும், கருவூலங்கள் காகிதமற்ற அலுவலகங்களாகவும் மாற்றப்படும். இதன் மூலம் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணைய வழி மூலம் பட்டியல்களைக் கருவூலத்தில் சமர்ப்பித்த நேரத்தில் இருந்து, பயனாளியின் வங்கிக்கணக்கில் பணம் சேரும் வரையில் வெளிப்படையாகவும், எளிதாகவும் அறிந்து கொள்ளலாம். இந்த திட்டம் மூலம் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் பணிப்பதிவேடு எளிமையாகப் பராமரிக்கும் வகையில் கணினி மயமாக்கப்படவுள்ளது. இந்த முறையால் பணிப்பதிவேட்டை ஒவ்வொரு பணியாளரும் தனது கடவுச்சொல் பயன்படுத்த செல்லிடப்பேசி மூலமும் அறிந்து கொள்ளலாம். 
இத்திட்ட செயல்பாடுகளை முழுமையாக பணியாளர்கள் அறிந்து கொண்ட பின் வரும் நவம்பர் 2018-இல் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 
மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 7.30 லட்சம் ஓய்வூதியதாரர்களில் 7 லட்சம் பேர் ஓய்வூதியத்தை கருவூலம் மூலமாக பெற்று வருகின்றனர். 
பொதுத்துறை வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெற்று வந்த சுமார் 30 ஆயிரம் ஓய்வூதியர்களின் ஊதியங்கள் கருவூலங்களின் மூலமாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
அதேபோல், ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவ சிகிச்சை பெற 726 ஆக இருந்த மருத்துவமனைகளின் எண்ணிக்கை 913ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத் தலைமை இடங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகள் மட்டுமன்றி வட்டாரத் தலைமையிடங்களிலும் உள்ள மருத்துவமனைகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஓய்வூதியர்கள் தங்களது துணைவியருடன் வசிக்கும் பகுதிக்கு அருகே அனுமதித்த மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் ஹரியாணா மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் வ.ராஜசேகர், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, வருமான வரித்துறை ஆணையர் கே.ரவி ராமச்சந்திரன், மாநில கணக்காயர் டி.ஜெயசங்கர், மாவட்ட வன அலுவலர் (பொ) போஸ்லே சச்சின் துக்காராம், சார் ஆட்சியர் த.ரத்னா, கூடுதல் இயக்குநர் (மின் ஆளுகை) உள்பட 2,210 பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com