மாவட்ட அளவிலான கேரம் போட்டி: அக்.3-க்குள் பெயர் பதிவு செய்யலாம்

திருவள்ளூர் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க  விரும்புவோர் வரும் அக்டோபர் 3-ஆம்

திருவள்ளூர் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க  விரும்புவோர் வரும் அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் மட்டும் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2018-2019-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி இருபாலருக்கும் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் மழலை வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இரு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. இளநிலைப் பிரிவு (மழலை வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை), முதுநிலைப் பிரிவு (6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை) ஆகிய இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டியில் கட்டாயம் h‌t‌t‌p://‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/​N‌e‌w‌s‌d​a‌t/‌s‌p‌o‌r‌t‌s‌s‌i‌t‌e/  என்ற ஆன்லைன் முகவரி மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதில், பங்கேற்கும் மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பள்ளியில் படிப்பதற்கான சான்றிதழை பெற்று வந்து கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுகிறவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளத் தகுதியானவர்கள் ஆவார்.  இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பயணப்படி மற்றும் தினப்படி ஆகியவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட மாட்டாது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தலா 3 ஆண்கள், பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும், விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர், ஒருங்கிணைந்த மாவட்ட  விளையாட்டு அரங்கம், திருவள்ளூர், (தொலைபேசி எண். 7401703482) தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com