வகுப்புகளைப் புறக்கணித்து ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்: மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை

பள்ளிப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியையைக் கண்டித்து பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகளைப்

பள்ளிப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியையைக் கண்டித்து பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 480-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 15 ஆசிரியை, ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக ஜீவா பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக தலைமை ஆசிரியைக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து, தலைமை ஆசிரியை மீது ஆசிரியர்களும், ஆசிரியர்கள் மீது தலைமை ஆசிரியையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் செய்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவின்பேரில், திருத்தணி கல்வி மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர் முனிசுப்புராயன் (பொறுப்பு) கடந்த வாரம் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியையிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து ஆசிரியர்களும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை பள்ளித் தலைமை ஆசிரியைக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தலைமை ஆசிரியையைக் கண்டித்து ஆசிரியர்கள் பள்ளியில் வகுப்புகளைப் புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாவட்டக் கல்வி அலுவலர் முனிசுப்பராயன், இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார். 
அப்போது ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளில் பேசுவதாகக் குற்றம் சாட்டினர். 
அதேபோல் தனக்கு ஆசிரியர்கள் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை என தலைமை ஆசிரியை குற்றம் சாட்டினர். 
இரு தரப்பினரும் குற்றச்சாட்டு குறித்து எழுத்துப்பூர்வமாக கொடுத்ததை அடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மேல் நடவடிக்கை எடுப்பார் என முனிசுப்பராயன் (பொறுப்பு) ஆசிரியர்களிடம் தெரிவித்துச் சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com