பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலரங்கம்

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கான   பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கான   பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார்.
இயக்குநர் வி.ராமநாதன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜீ.மோகன்குமார் வரவேற்றார். ஓய்வு பெற்ற தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தேர்வு கட்டுப்பாட்டு இயக்குநர் கே.தேவராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு கற்பித்தலில் ஆர்வம் இருக்க வேண்டும். தான் எந்தப் படம் குறித்து கற்பிக்கப்போகிறோமோ அதில் தெளிந்த அறிவு இருக்க வேண்டும். இதற்கான தயாரிப்பில் ஆசிரிய, ஆசிரியைகள் கவனம் செலுத்த வேண்டும்.
45 நிமிடங்களுக்குள் பாடத்தை நடத்தி முடித்து, கேள்வி கேட்டு, இறுதியாய் அனைத்தையும் நினைவு கூறுவது என்பது ஒரு கலை. அந்தக் கலையை அனைவரும் பழக வேண்டும். பாடப்புத்தகம் என்பது வெறும் வழிகாட்டி மட்டுமே.
அதையும் தாண்டி பல செய்திகளை மாணவ, மாணவிகளுக்கு சொல்ல வேண்டியது ஆசிரியரின் கடமை என்றார்.
என்ஐடிடிஆர் கல்வி நிறுவன பேராசிரியர் ஜனார்த்தனன் பேசுகையில், நாம் படித்த காலமும், தற்போதுள்ள காலமும் வேறாக உள்ளன. மாணவர்களின் மனநிலையும் முற்றிலும் வேறு. தற்போதுள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் மீது அலாதி பிரியம் உள்ளது.
இன்றைக்கு கல்விக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ, அப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார்.
இதில், கல்லூரிப் பதிவாளர் ர.சத்தியசீலன், செயலர் ம.புர்க்கிந்த்ராஜ், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com