இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நிர்வாகமும், திருவண்ணாமலை சட்டப் பணிகள் ஆணைக் குழுவும் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார் முன்னிலை வகித்தார்.
கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தமிழ், தமிழிலக்கியம், மக்களாட்சி மகத்துவம், அறிவியல் கண்டுபிடிப்புகள், சட்டம், சட்டப் பிரிவுகள், வழக்குகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களுடன் மாணவ, மாணவிகளுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு வழங்கிப் பேசினார்.
முகாமில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலர் கே.ராஜ்மோகன், தலைமை குற்றவியல் நடுவர் ஆர்.நாராஜா, கல்லூரி கல்வி புல முதன்மையர் அழ.உடையப்பன், பேராசிரியர் டி.அருண்குமார், சட்டப்பணிகள் ஆணைக் குழு நிர்வாக அலுவலர் சையத் ரஷித், பேராசிரியர்கள் கு.இளங்கோவன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com