திருவண்ணாமலை ஒன்றியத்தில் 5,568 தனிநபர் இல்லக் கழிப்பறைகள்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் 5,568 பேருக்கு ரூ.6 கோடியே 68 லட்சம் மதிப்பில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுப்பட்டு வருவதாக ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.

திருவண்ணாமலை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் 5,568 பேருக்கு ரூ.6 கோடியே 68 லட்சம் மதிப்பில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுப்பட்டு வருவதாக ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சி முகமை மூலம் முழு சுகாதார திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்து 16 ஆயிரம் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை ஒன்றியத்தில் மட்டும் 5,568 பேருக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்ட ரூ.6 கோடியே 68 லட்சத்து 16 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் ஊராட்சியில் 323 கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன.
இவற்றில் 57 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
65 தனி நபர் கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள கழிப்பறைகள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com