"திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம்'

திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற அருணகிரிநாதர்

திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற அருணகிரிநாதர் திருவிழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலிலில் வளாகத்தில் உள்ள அருணகிரிநாதருக்கு 63-ஆம் ஆண்டு விழா 3 நாள்கள் நடைபெற உள்ளது.
இதன் முதல் நாள் விழா திங்கள்கிழமை தொடங்கியது. விழாவுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அம்மா அணி செயலர் கே.ராஜன் தலைமை வகித்தார். விழாக்குழுச் செயலர் பி.ராமச்சந்திர உபாத்யாயா வரவேற்றார். முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவரும், விழாக்குழுத் தலைவருமான வி.தனுசு விளக்கவுரை ஆற்றினார்.
விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, திருப்புகழ் பாடல்களும், உரையும், திருவருணை திருப்புகழ் அமுதம், கந்தர் அலங்காரம், பதின்மர் சொற்பொழிவு, திருப்புகழ் சாரம் ஆகிய நூல்களை வெளியிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசியதாவது: திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். பின்னர், முதல்வரிடம் ஒப்புதல் பெறப்பட்டு மணிமண்டபம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என்றார்.
இதில், கோவை காமாட்சிபுரிஆதீனம் சிவலிலிலங்கேஸ்வரர் சுவாமிகள், கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன், நகரச் செயலர் ஜெ.செல்வம், விழாக்குழு புரவலர்கள் கிருஷ்ணகஜேந்திரன், என்.செல்வதுரை, பி.கே.கோவிந்தராசன், ஆசிரியர்கள் மு.சீனிவாசவரதன், மு.கண்ணன், தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.கபிலன், கவிஞர் ச.உமாதேவி, பலராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com