அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழா நிறைவு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, ஸ்ரீசண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, ஸ்ரீசண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 23 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 28 -ஆம் தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும், அன்றைய தினம் இரவு 10 மணிக்கு வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது.
பஞ்ச ரதங்கள் வீதியுலா: நவம்பர் 29 -ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது. 30 -ஆம் தேதி மாலை தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது.
பரணி தீபம், மகா தீபம்: தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 2 -ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டன.
3 நாள் தெப்பல் உற்சவம்: தொடர்ந்து, 3 -ஆம் தேதி இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 4 -ஆம் தேதி இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், 5-ஆம் தேதி இரவு ஸ்ரீசுப்ரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை இரவு ஸ்ரீசண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள தேரடி தெருவில் இருந்து ரிஷப வாகனத்தில் வீதியுலா புறப்பட்ட ஸ்ரீசண்டிகேஸ்வரரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
தொடர்ந்து, தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்களில் வலம் வந்த ஸ்ரீசண்டிகேஸ்வரர் மீண்டும் நிலைக்கு வந்தடைந்தார். இத்துடன், இந்தக் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com